அல்லும் பகலும் உன்னை பற்றியே எனது சிந்தனை. எனக்கு உறக்கம் இல்லை. திரும்பத் திரும்ப உன்னுடைய பெயரை உச்சரித்த வண்ணம் உள்ளேன். ஒவ்வொரு அடியிலும் நான் உன்னை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
உனக்கு என்ன நேரும் என்பதை நான் மட்டுமே அறிவேன். கவனி, உன் பொருட்டு, உன் வேதனைகளை அகற்றி நான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. உன்னை நான் ஒருபோதும் மறவேன்.
இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் நீ இருப்பினும் உன்னை நினைவில் வைத்திருப்பேன். நான் உன்னுடைய பக்தியை விரும்புகிறேன். என் பக்தனுடைய கொத்தடிமை நான்.
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.