நான் சில நாட்களாக உன்னை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். பாசம் பாசம் என ஏங்கி அந்த மாயையில் சிக்கி உருக்குலைந்து விட்டாய்.
உன்மையான பாசத்திற்காக நீ ஏங்கும் ஏக்கத் தைத் காண என்னால் முடியவில்லை. இது மாயை நிறைந்த உலகம் என எத்தனையோ வழிகளில் உனக்கு அறிவுறுத்தி விட்டேன்.
ஆனால் நீ திரும்பத் திரும்ப அந்த மாய வலை யில் சிக்கிக்கொண்டு வெளியேற தெரியாமல் தவிக்கின்றாய். இப்போது உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள்.
உன் நலனை விரும்பும் உறவுகளாக அதாவது தாயாக, தந்தையாக, சகோதரனாக, குருவாக, உற்ற தோழனாக நான் இருக்கையில் நீ ஏன் இன்னொருவரின் பாசத்திற்கு ஏங்கவேண்டும்.
உனக்குள் இருக்கும் எனக்காக ஏங்கு. நீ ஏங்க தொடங்கும்போதே நான் உன் அருகில் வந்து விடுவேன். உன்னை விரும்பும் நிரந்தர உறவாக உன்னுடன் நான் இருப்பேன்.
இனி எப்படி இருக்கவேண்டும் என்ற முடிவை நீ எடுத்துவிட்டாய் அல்லவா? அதையே பின்பற்று. நீ எதற்கும் கலங்க வேண்டியிராது. நலமே பெருகட்டும். ஜெயமே உண்டாகட்டும்.