ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.
பாபா: (அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக் கொடுத்து) உங்களுக்கு தலைவலி இல்லையா?
பக்தை : இருந்தது. இப்போது நின்றுவிட்டது. (தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).
பாபா: இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.
பக்தை:நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.
பாபா: சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பக்தை குழப்பமடைந்தார்.
பாபா: உங்கள் வீட்டில் என்ன பூஜை.
பக்தை: கணபதி பூஜை.
பாபா: உங்கள் தாயார் வீட்டில்?
பக்தை: கணபதி.நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும்,
தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.
பாபா: அவை எல்லாம் என்னை வந்தடைந்தன. ஆகவே சிறுமியாக
இருந்தகாலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.
பக்தை : பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர். அது சரிதானா?
பாபா: உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி எறிவீர்களா? அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.
ஓம் சாய் ராம்