Ads

என் அன்பு குழந்தையே

  ஓம்ஜெய்சாய்ராம்!

அல்லா மாலிக்!

என் அன்பு குழந்தையே!!!

🌼நீ வாழ்க்கையில் போராடும் குணத்தையும் பெற்று தீர்க்கமாக வாழ நினைக்கும் என் பிள்ளையே!

🌼மன உறுதி இருப்பவர்களிடம் தான் அதற்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது!

🌼உன் மனம் என்பது நான் வசிக்கும் கோட்டை அந்த கோட்டையில் என் அனுமதி இல்லாமல் ஒருதூசி கூட நுழையாது !

🌼இன்று என்னை காண வந்த என் பிள்ளையான உனக்கு நிறைய விஷயங்களை புரிய வைத்தேன் !

🌼என் ஆரத்தியையும் கண்டாய் அங்கு உன் முன்னர் சிரித்துக் கொண்டு இருந்தேன் எதற்கு தெரியுமா நீ வளரவே இல்லை உன் மனதளவில் சிறு பிள்ளையாகவே இருக்கிறாய் !

🌼உனக்கு பக்குவத்தை புகட்ட எனது சீற்றத்தையும் காண்பிக்க வேண்டியதாய் உள்்ளதே !

🌼உன் மனதில் என்னை காண வருவதற்கு முன் பல எண்ணங்கள் குதர்க்கமாக எழும் அது ஏன் என்ற கேள்விக்கு விடை கூறுகிறேன் கேள் !

🌼என் தரிசிக்க வரும் என் பிள்ளையின் மனம் அமைதியாக நிலைப்படும் நிலையில் இருக்க வேண்டும் எந்த விதமான சஞ்சலமும் இல்லாமல் மனம் காலியாக இருக்க வேண்டும் அதற்கு தான் என்னை பார்ப்பதற்கு முன் உன் மனதில் எழுந்த எண்ணங்களே அவை !

🌼புரியவில்லயா நீ வெண்ணீரை கொதிக்க வைக்கிறாய் அது முதலில் சூடு ஏறுவதில்லை சிறிது நேரத்தில் தீயின் வெப்பம் அதை கொதிக்க வைத்து மேலே நீராவி வரும் அதன் மூலம் தான் தண்ணீர் கொதித்துவிட்டது என்ற தீர்மானிக்கிறாய் அதை போலவே தான் என் இடத்திற்கு நீ வருவதற்கு முன் உன் மனம் கொதிப்படைந்து உள்ளதாய் இருக்கும் அதை போக்கி உனக்கு ஒரு தெளிவான மனஅமைதியுடன் என்னை தரிசிக்க அவ்வாறு செய்தேன்!

🌼நீ துன்பங்களால் வழு இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாய் இந்த நேரத்தில் தேவையில்லாத எண்ணங்கள் உன்னிடமும் உன் மனம் இடத்தில் உள்ளே வர எல்லா முயற்சியையும் செய்யும் !

🌼வாழ்க்கையில் மேடுகள் இல்லாத இடம் கிடையாது அது தான் உன்ை யார் என்று உனக்கு உன்னையும் அறிமூகம் படுத்தும் !

🌼எல்லா மரங்கள் சிறியதாக இருப்பதும் இல்லை பெரிதாக இருப்பதும் இல்லை !

🌼அதற்கு உதாரணமாய் ஒரு கதை சொல்கிறேன கேள்!

🌼சிறியதாய் இருக்கும் மரங்களை பெரிய மரங்களை பார்த்து பிரம்பிக்குமாம் ஒரு நாள் நான் இப்படி வளர வேண்டும் என்று அதுவும் வளரருமாம் பெரிதாக !

🌼அதை போலவே சிறிதாய் இருக்கும் மரங்கள் அதை எண்ணத்துடன் தான் இருக்கும் நம்மால் முடிந்த அளவுக்கு அதன் வளர்ச்சிக்கு ஒரு துணையாய் அதற்கு நிழல் கொடுப்போம் என்று நினைத்து அவ்வாறு செய்தது !

🌼அதை போலவே அந்த மரம் வளர்ந்து மற்ற மரங்களுக்கு தான் பெற்ற உதவியை செய்ததாம் !

🌼அவ்வாறு ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து நாளடைவில் அது ஒரு பசுமையான மரங்களும் பூக்களும் நிறைந்த நந்தவனமாக மாறியது!

🌼முதலில் வளர்ந்த நின்ற அந்த மரத்திற்கு நாம் வளர வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது அதே போல் தானே மற்ற மரங்களுக்கும் தோன்றி இருக்கும் என்று நினைத்ததால் தான் நந்தவனம் தோன்றியது!

🌼முதல் மரம் நாம் வளர்ந்து விட்டோம் இது போதாது வானளவாக வளர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் நந்தவனம் தோன்றி இருக்காது அது 

தரத்தை பார்க்கவில்லை தனக்கு கிடைத்த போதுமான வளர்ச்சியில் மனநிறைவு பெற்று தான் இருந்த அந்தபழைய நிலையையும் நினைத்தால் தான் அவற்றால் இப்படி யோசிக்க முடிந்தது !

🌼அவற்றை போலவே மனிதனும் எண்ணினால் எல்லாரும் வாழும் வாழ்க்கை நந்தவனமாக மாறும் !

🌼நீ நன்றாக வாழ்வாய் எனக்கு நறுமணத்தை தர வைத்தற்கு காரணம்

உன் வாழ்வில் கஷ்டங்கள் நிம்மதியற்ற நிகழ்வுகள் என தூர்நாற்றம் வீசிய காலங்கள் மாறி நறுமணம் வீசும் வசந்தகாலம் வந்துவிட்டது என்ற உனக்கு எடுத்துரைக்கவே நான் இன்று இவ்வாறான நிகழ்வுகளை நிகழ்த்தினேன்!

🌼உனக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா நிகழ்வுக்கான மாறுதல்களை நான் கொண்டு வருவேன் !

🌼எதற்கும் பயப்படாதே திகைப்படையாதே நான் என்ற உன் சாய்தேவா உனக்காக இருக்கிறேன்!

🌼 என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் உனக்கு மனதில் இருந்து கொடுக்கிறேன்!

🌼உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை!

🌼நீ ஜெயமாக நன்றாக மனநிம்மதி பெற்று நல்ல எதிர்காலத்தை பொற்காலமாய் நீ வாழ்வாய் இது உன் உயிரான சாய்தேவாவின் வாக்கு!

🌼என் வாக்கை என் பிள்ளைக்கான வாக்கை காப்பாற்ற உன் சாய்தேவா என்ன வேண்டுமானலும் செய்வேன் !

🌼உன் அம்மாவாக அப்பாவாக என்றும் என் இருதயத்தின் கருவறையில் சுமந்து வளர்த்து வாழ அரவணைப்பேன் இந்த துவாராகமாயீ தாய் நான் தாய் மற்றும் தந்தை மட்டும் இல்லை உனக்கான வாழ்க்கையின் உயிராய் எப்போதும் இருப்பேன் !!!

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!